உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

காசாவுக்கான அமைதிச் சபையை அமைக்க டிரம்ப் நிர்வாகம் திட்டம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
51 பார்வைகள்

காசாவுக்கான அமைதிச் சபை ஒன்றை இந்த வாரத்துக்குள் அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருப்பதோடு அந்தப் குழுவின் முதல் கூட்டம் டெவோஸ் பொருளாதார மாநாட்டுக்கு மத்தியில் நடத்த ஏற்பாடாகி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமான பலஸ்தீன–அமெரிக்க மத்தியஸ்தர் ஒருவரான பிஷாரா பஹ்பா குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டெவோஸ் நகரில் எதிர்வரும் ஜனவரி 19 தொடக்கம் 23 ஆம் திகதி வரை இந்த பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது.காசாவை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை கண்காணிக்கும் பலஸ்தீன துறைசார் நிபுணர்கள் கொண்ட அரசு ஒன்றை அமைப்பதற்கு முன்னதாகவே டிரம்ப் தலைமையில் 15 உலகத் தலைவர்களை உள்ளடக்கிய காசா அமைதிச் சபை அமைக்கப்படவுள்ளது.

இந்த சபையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையின் முக்கிய மத்தியஸ்த நாடுகளான கட்டார் மற்றும் எகிப்து அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல அரபு நாட்டு தலைவர்களும் பங்கேற்கவிருப்பதாக பஹ்பா, அஷர்க் அல் அவ்சாத் அரபு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இந்த சபையில் ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.பஹ்பா கடந்த ஒக்டோபரில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் முன்னர் ஹமாஸ் மற்றும் டிரம்ப் நிர்வாகத்திற்கு இடையே மத்தியஸ்தராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ரோவில் இந்த வாரத்தில் இடம்பெறும் பலஸ்தீன தரப்புகளுக்கு இடையிலான கூட்டம் ஒன்றில் பலஸ்தீன துறைசார் நிபுணர்களின் குழு விபரம் அறிவிக்கப்படும் என்றும் பஹ்பா குறிப்பிட்டுள்ளார்.காசாவில் கடந்த ஒக்டோபரில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் முதல் கட்ட போர் நிறுத்தம் எட்டப்பட்டு கைதிகள் பரிமாற்றங்கள் இடம்பெற்றபோதும் இரண்டாம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது ஸ்தம்பித்துள்ளன.

இரண்டாவது கட்டத்தில் இஸ்ரேல் காசாவில் இருந்து முற்றாக வாபஸ் பெறுவது, ஹமாஸ் ஆயுதங்களை களைவது, காசாவில் இடைக்கால அரசு ஒன்றை அமைப்பது மற்றும் அங்கு சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது போன்ற சிக்கலான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் இஸ்ரேல் அதனை தினசரி மீறி வருகிறது.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 400இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.காசாவில் கடும் குளிருடனான காலநிலை நிலவுவதோடு அந்தப் பகுதிக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் சூடேற்றும் வசதிகளை இஸ்ரேல் முடக்கி வரும் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் குளிரினால் மூன்று குழந்தைகள் உயிரிழுந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மாத குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கடந்த திங்களன்று நான்கு வயது குழந்தை மற்றும் ஏழு நாள் சிசு ஒன்றும் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளிர் காலம் ஆரம்பித்தது தொடக்கம் குறைந்தது ஆறு குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0