உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதுள்ளது.

அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்ட முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் இங்கு முன்மொழிந்தனர்.

கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாக்குவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவநம்பிக்கையுடன் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய கல்வி மறுசீரமைப்புகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

அரசாங்கம் தொடங்கியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முதலாம் தர மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் திட்டமிட்டபடி செயற்படுத்துவதாகவும், ஆனால் மொடியுல்களைத் தயாரிப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்து 6ஆம் வகுப்பு பாட மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கணனிகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றோரின் பணத்தில் அன்றி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

மேலும், மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

70 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

47 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

69 0 0