உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சஜித்துக்குத் தொலைபேசி ஊடாக ரணில் பிறந்தநாள் வாழ்த்து!- மத வழிபாட்டு நிகழ்வுக்கும் பிரதிநிதிகள் அனுப்பி வைப்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.அத்துடன், சஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுக்குத் தமது பிரதிநிதிகளையும் ரணில்  அனுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் 59 ஆவது பிறந்தநாள் நேற்றாகும்.இதனை முன்னிட்டு கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, சிரேஷ்ட உப தலைவர் சாகல ரத்நாயக்க மற்றும் ரவி கருணாநாயக்க எம்.பி. ஆகியோர் பங்கேற்று வாழ்த்துக் கூறினர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு வெற்றியை நோக்கிப் பயணிப்பதை நேற்றைய நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

சஜித்தின் பிறந்தநாள் நிகழ்வில் ஐ.தே.க. பிரதிநிதிகள் பங்கேற்றமை இரு தரப்பு இணைவுக்கான இறுதியான – உறுதியான சமிக்ஞை எனத்  தெரியவருகின்றது.சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் நேரடியாக சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

சஜித்துடன் இணைந்து செயற்படத் தயார் என்பதையே ரணில், சஜித்துக்கான பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார் என்று ஐ.தே.க. ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

71 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

47 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

69 0 0