உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கை மீண்டெழ சீனா முழு ஆதரவு!- விஜித ஹேரத்திடம் வாங்யி உறுதி!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

லங்கை விரைவான மீட்சிக்கான சரியான பாதையில் உள்ளது என்றும், அந்த நோக்கத்துக்காக சீன அரசு அதன் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ குறிப்பிட்டார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் விஜித ஹேரத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை வரவேற்று, டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர அனர்த்த நிவாரணத்துக்காக சீன அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்த விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டது.இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அடையாளம் காணப்பட்ட வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சீன அரசின் உதவியைக் கோரியுள்ளோம்.

அந்தக் கோரிக்கையில் தான் தனிப்பட்ட முறையில் தலையிடுவதாக அமைச்சர் வாங் யி உறுதியளித்தார்.இலங்கை விரைவான மீட்சிக்கான சரியான பாதையில் உள்ளது என்றும், அந்த நோக்கத்துக்காக சீன அரசு அதன் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.” – என்றும் விஜித ஹேரத் பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

67 0 0