உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வீதியில் வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாக்குதல்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கடுவலை – கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் , சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபரைத் துரத்திச் சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் தாக்குதலால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ராகமை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் இன்று செவ்வாய்க்கிழமை (13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

68 0 0