உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பருத்தித்துறை துறைமுக பகுதியில் அபாய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் அகற்றம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

பருத்தித்துறை துறைமுக பகுதியில் எந்த நேரமும் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் இன்றைய தினம் (13.1.2026) அகற்றப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் தலையீட்டில் இலங்கை மின்சார சபையினரால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருத்தித்துறை துறைமுக பகுதிக்கு அதிகளவானோர் தினமும் மாலை வேளையில் வந்து செல்கின்ற பொழுதுபோக்கிடமாக காணப்படுவதுடன் கடற்கரை வீதியூடாக அதிகளவான மக்கள் பயணித்து வரும் நிலையில் எந்த நேரமும் முறிந்து விழும் அபாய நிலையில் மின்கம்பம் ஒன்று சிதைவுக்குள்ளாகி காணப்பட்டு வந்தது.

இதையடுத்து இன்று காலை இலங்கை மின்சார சபையின் ஊழியர்களினால் மேற்படி மின்கம்பம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டுள்ளது.மேற்படி விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்தியாக்கப்பட்ட நிலையில் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

68 0 0