உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அரச ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிடுவதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகை கால முற்பணங்களை செலுத்துவது தொடர்பான விதிகளின்படி,

தைப்பொங்கல், ரமழான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நிகழ்வுகளுக்கும், புனித யாத்திரைகளுக்கும் (ஸ்ரீபாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) அரச அதிகாரி ரூ.10,000/- முற்பணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றினை வட்டி இல்லாமல் 08 மாதாந்திர தவணைகளில் அல்லது தேவைப்பட்டால் முன்னதாகவே மேற்படி முற்பணத் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மேற்படி பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

68 0 0