உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

5.5 இலட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
35 பார்வைகள்

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தடையைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது தளங்களில் இருந்து சுமார் 5,50,000 கணக்குகளை முடக்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்தின்படி, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ் போன்ற தளங்களில் 16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய சிறுவர்கள் கணக்கு வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கு இணங்கும் வகையில், அதன் முதல் வாரத்திலேயே மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் 3,30,639 கணக்குகளையும், பேஸ்புக்கில் 1,73,497 கணக்குகளையும், த்ரெட்ஸ் தளத்தில் 39,916 கணக்குகளையும் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மெட்டா ஒப்புக்கொண்டாலும், இத்தகைய “போர்வைத் தடை” தீர்வாகாது எனத் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, எப் ஸ்டோர் மட்டத்திலேயே வயதுச் சரிபார்ப்பைச் செய்வது மற்றும் பெற்றோரின் அனுமதிக்கு விதிவிலக்கு அளிப்பது போன்ற மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை மெட்டா வலியுறுத்தியுள்ளது.

இதுவே அனைத்து செயலிகளுக்கும் பொருந்தக்கூடிய நிலையான பாதுகாப்பை வழங்கும் என்றும் அந்நிறுவனம் வாதிடுகிறது. பெற்றோரின் அனுமதிக்கும் வாய்ப்பளிக்காத அவுஸ்திரேலியாவின் இந்தச் சட்டம் உலகிலேயே மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது.

இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, பிரிட்டன் போன்ற பிற நாடுகளும் இதைப் பின்பற்ற ஆர்வமாக உள்ளன.இருப்பினும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மனநல ஆர்வலர்கள் சில கவலைகளை முன்வைக்கின்றனர். சிறுவர்கள் தொழில்நுட்பக் குறைபாடுகளைப் பயன்படுத்தி இந்தத் தடையை எளிதில் மீறக்கூடும்.

தனிமையில் வாழும் சிறுவர்கள் அல்லது சமூக தொடர்புகள் தேவைப்படும் மாற்றுத் திறனாளி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுவர்களின் இணையத் தொடர்பை இது துண்டிக்கும்.முக்கியமாக, இணைய உலகின் யதார்த்தங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைச் சிறுவர்களிடம் இருந்து இது பறித்துவிடும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0