உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று திங்கட்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

திருமதி ஜூலி சாங் தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

அத்துடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற திருமதி ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

44 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

61 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

65 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

54 0 0