விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!
அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் நேற்று (12.01.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதாலேயே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் முச்சக்கரவண்டி வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.