உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எங்களின் முடிவுகளை நாங்களே எடுக்கின்றோம் – கிரீன்லாந்து பிரதமர்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
55 பார்வைகள்

எங்களின் முடிவுகளை நாங்கள் ஜனநாயக ரீதியில் எடுக்கின்றோம் என கிரீன் லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-ஃப்ரெடெரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.கிரீன்லாந்தின் பாதுகாப்பு விவகாரம் முழுமையாகவும் உறுதியாகவும் நேட்டோ (NATO) கூட்டமைப்பின் கீழ் தான் அமைந்துள்ளது என நீல்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கிரீன்லாந்தில் காட்டும் ஆர்வம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் குறித்து பலரிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை தாம் புரிந்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.தனது ஃபேஸ்புக் பதிவில் கருத்து வெளியிட்ட நீல்சன், “இந்தச் சூழலில் சில விஷயங்கள் தெளிவாக சொல்லப்படுவது அவசியம்” என வலியுறுத்தினார்.

“கிரீன்லாந்து, டென்மார்க் அரசாட்சியின் (Kingdom of Denmark) ஒரு பகுதியாகவும், அதே நேரத்தில் காமன்வெல்த் அமைப்பின் மூலம் நேட்டோவின் ஒரு அங்கமாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதன் பொருள், எங்களின் பாதுகாப்பும் பாதுகாப்புத் துறையும் நேட்டோவுக்குள் தான் அடங்குகின்றன. இது அடிப்படையானதும் உறுதியானதுமான நிலைப்பாடு” என அவர் தெரிவித்தார்.மேலும், அண்மைக் காலமாக கிரீன்லாந்து மீது சர்வதேச கவனம் அதிகரித்திருப்பதை ஒப்புக்கொண்ட அவர், “எங்கள் நாட்டிற்கு அதிகமான உலகளாவிய கவனம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

அது தனிப்பட்ட முறையில் நல்ல விடயமே எனவும் இது கிரீன்லாந்தின் மூலோபாய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது எனவும் கூறினார்.

அதே நேரத்தில், நேட்டோவுடன் இணைந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.நாங்கள் ஒரு ஜனநாயக சமூகம் எனவும் எங்கள் முடிவுகளை நாங்களே எடுக்கிறோம். எங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன” எனவும் ஜென்ஸ்-ஃப்ரெடெரிக் நீல்சன் கூறினார்.

அமெரிக்காவின் ஆர்வம் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், கிரீன்லாந்து தனது அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0