உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கேகாலை சிறுவனின் மரணத்தில் மர்மம்; சடலம் தோண்டி எடுப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கேகாலை, தெரணியகலை நூரி தோட்டத்தில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் மரணத்தில் நிலவும் மர்மம் காரணமாக, அவிசாவளை நீதவான் பிரமோத் ஜயசேகர முன்னிலையில் இன்று (12) சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த சிறுவன் கடந்த ஜனவரி 2 ஆம் திகதி தனது தாய் மற்றும் தந்தையுடன் வீட்டில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.சம்பவம் தொடர்பாக நூரி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சிறுவனின் தாய் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது குருவிட்ட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்து, அவரது உறவினர்களும் நூரி தோட்ட மக்களும் கடந்த 6 ஆம் திகதி தோட்டப்பகுதியில் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மரணத்தின் பின்னாலுள்ள உண்மை வெளிவர வேண்டும் எனவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அவிசாவளை நீதவான் முன்னிலையில் இன்று சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன், மேலதிக பிரேதப் பரிசோதனைக்காக அது அனுப்பி வைக்கப்படவுள்ளது.சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

41 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

53 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

65 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

54 0 0