ரோஹினி கவிரத்னவுக்கு புதிய பதவி.!
ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணியின் தலைவியாக ரோஹினி கவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கான நியமனக் கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கண்டியில் வைத்து கையளித்துள்ளார்.அத்தோடு, இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கலந்து கொண்டார்.