சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழப்பு.!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசுமோட்டை நான்காம் கட்டை பகுதியில் இன்று12.01.2025 மாலை 4.40 மணி அளவில் விஸ்வமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும் வவுனியாவில் இருந்து விஸ்வமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
குறித்த சம்பவத்தின் பேருந்தின் சாரதியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.