உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இந்தோனேசியாவும் மலேசியாவும் கடந்த வார இறுதியில் எலோன் மஸ்க்கின் க்ரோக் (Grok) AI-க்கான அணுகலைத் தடை செய்தன.பாலியல் உள்ளடக்கத்தை உருவாக்குதாக குற்றம் சாட்டப்பட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்பைத் தடை செய்த முதல் நாடுகளாக இன் மூலம் அவை மாறின.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி ஆபாச உள்ளடக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முழு சமூகத்தையும் பாதுகாக்க இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு க்ரோக்கிற்கு தற்காலிகத் தடை விதிக்கிறது என்று சனிக்கிழமை (10) வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்குமாறு தளம் X-ஐ அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது என்று அது தெரிவித்துள்ளது.அதேநேரம், பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் வரை க்ரோக்கிற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதாக மலேசியாவின் இணைய ஒழுங்குமுறை ஆணையகம் ஞாயிற்றுக்கிழமை (11) கூறியது.

மலேசிய சட்டத்தை மீறக்கூடிய AI-உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைத் தடுக்க X Corp மற்றும் xAI LLC-க்கு மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் அறிவிப்புகளை அனுப்பியதாகவும், ஆனால் நிறுவனத்தின் பதில்கள் AI கருவியால் ஏற்படும் உள்ளார்ந்த அபாயங்களை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டதாகவும் கூறியது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இந்த நடவடிக்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடையற்ற படங்களை உருவாக்குவதற்கு AI கருவி பரவலான கண்டனங்களைப் பெற்றதை அடுத்து மேற்கண்ட நாடுளின் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0