உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பில் கலாமித்ரா விருது விழா!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கலை, இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து வரும்  இளம் படைப்பாளிகளுக்குக் களம் அமைப்பதைப் பிரதான செயற்பாடாக் கொண்டு  தலைநகரில் கடந்த  45ஆண்டுகளாக  பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம் வரும் ஐனவரி 30ஆம் திகதி 46ஆவது  ஆண்டுக்குள் காலடி பதிக்கின்றது.

பணிகளின் வரிசையில் 1995ஆம் ஆண்டு  முதல்  இளையோருக்கான கலை,கலாசாரப் போட்டிகளை நடத்தி  விருதளித்து   ஊக்குவித்து வரும் இந்த  அமைப்பு  இதன் 20ஆவது  ஆண்டின் தொடராக கலாமித்ரா விருது விழாவை  வரும் 30 ஆம் திகதி கொழும்பு – 11 செட்டியார் தெருவில்  அமைந்துள்ள  கல்யாண முருகன் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு  நடத்துகின்றது.

இந்த விழாவுக்கு அமைப்பின்  நிறுவனர்  ராதாமேத்தா தலைமை ஏற்கின்றார்.இதில் பிரதம அதிதியாக  ஹாசிம் உமர் பவுண்டேஷன் அமைப்பின்  நிறுவனர் ஹாசிம் உமர் கலந்துகொள்கின்றார்.

இந்த நிகழ்வினில் கலை, கலாசாரப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி  பெற்ற 25 பேருக்கு வெற்றியாளர் விருதும், கலை, இலக்கிய  படைப்பாக்கங்களில் தொடர்ந்து  பங்களிப்புச் செய்து வரும் பத்து துறைகளைச் சார்ந்த  பத்து பேருக்கு கலாமித்ரா விருதும், சமூக மற்றும் கலை ஊடகப் பணிகளில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் 15 பேருக்கு  சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வு புதிய அலை கலை வட்டத்தின் பிரதம நிர்வாகத்தின்  தலைவர் ஷண்மு, செயலாளர்  சி.அழகேஸ்வரன்  மற்றும்  பொருளாளர் ரவிராம் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒருங்கமைக்கப்படுகின்றது என்பது  குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

4 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

39 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

44 0 0