உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் அதிக நேரம் காத்திருக்கும் பேருந்தால் மக்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
54 பார்வைகள்

பருத்தித்துறை பகுதியிலிருந்து காலை 8.30 மணிக்கு கேவில் நோக்கி புறப்படும் அரச பேருந்தானது மருதங்கேணியில் 40 நிமிடங்களுக்கு மேலாக தரித்து நிற்பதால் பயணிகள் பாதிப்பு அடைந்துவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறையிலிருந்து கேவில் நோக்கி காலை 8.30 மணிக்கு புறப்படும் அரச பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மருதங்கேணி பகுதிக்கு வருகை தந்து அங்கே 40 நிமிடங்களுக்கு மேலாக மேலதிகமாக தரித்து நிற்கின்றது.

இதனால் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய மக்கள், வேலை ஆட்கள்,மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.குறித்த அரச பேருந்தானது அதிக நேரம் காத்திருப்பதால் ஏனைய பேருந்துகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் பாதிப்படைகின்றனர்.

நேரத்தை கடைப்பிடிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களை அலைக்கழிக்கும் அரச பேருந்து மீது நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை போக்குவரத்து சபை இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

2 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

39 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

44 0 0