உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நேட்டோ உடைந்து சிதறும்-டென்மார்க் பிரதமர் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கிறீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான டென்மார்கின் கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி பெற்ற பகுதியாக கிறீன்லாந்து செயல்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தீவு நாடாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தீவு அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

இதுகுறித்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் நேற்று முன்தினம் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நேட்டோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்காவும் டென்மார்க்கும் இடம் பெற்றுள்ளன. நேட்டோ கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தக்கூடாது.

ஏதாவது ஓர் உறுப்பினருக்கு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த நேட்டோ நாடுகளும் களமிறங்கும்.தற்போது டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிறீன்லாந்து தீவு அமெரிக்காவுக்கு தேவை என்று ட்ரம்ப் கூறுகிறார். இது நேட்டோ கூட்டமைப்பு ஒப்பந்தத்துக்கு எதிரானது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

வெனிசுலா நாட்டுடன் கிறீன்லாந்தை ஒப்பிட முடியாது. ஒரு வேளை கிறீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.கிறீன்லாந்து விவகாரத்தில் ஆறு ஐரோப்பிய நட்பு நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0