உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
62 பார்வைகள்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களை வாங்கும் நாடுகள் மீதான வரிகளை குறைந்தது 500 சதவீதமாக உயர்த்த அச்சுறுத்தும் ஒரு சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு வரிகளால் அழுத்தம் கொடுக்கப்படும்.

செனட் சபையில் ட்ரம்பின் நெருங்கிய காங்கிரஸ் நண்பர்களில் ஒருவரான அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இந்த விடயத்தை உறுதிபடுத்தினார்.ரஷ்யாவின் உக்ரேன் படையெடுப்புடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்துக்காக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இதில் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் தொகுப்பு மொஸ்கோவை பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கம் கொண்டது.இந்த நிலையில் மேற்படி புதிய சட்டமூலம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சட்டம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் மீது மிகப்பெரிய செல்வாக்கை வழங்கும்.மேலும் உக்ரேனில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் போருக்கு நிதியளிக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த அவர்களை ஊக்குவிக்கும் என்று தென் கரோலினா குடியரசுக் கட்சி தனது பதிவில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0