உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

குழந்தைகள் வறுமைக்கு நிறம் கிடையாது – வெள்ளையின குழந்தைகளுக்கு மட்டும் சலுகையா? பிரித்தானிய நிதியமைச்சர் கடும் கண்டனம்!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
54 பார்வைகள்

பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மீதான தடையை நீக்கும் புதிய சட்டத்தை நிதியமைச்சர் Rachel Reeves இன்று அறிமுகப்படுத்துகிறார்.இந்நிலையில், இந்தக் கொள்கை தொடர்பாக நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) தெரிவித்த கருத்துகள் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளன.

பிரித்தானிய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட வேண்டும் என Nigel Farage கூறியிருந்தார்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள Rachel Reeves, “குழந்தைகளின் தோலின் நிறத்தைப் பார்த்து அவர்களை வறுமையில் வைத்திருக்க Farage துடிக்கிறார்” எனச் சாடியுள்ளார்.

“வெள்ளையின குழந்தைகளுக்கு மட்டும் சலுகை, மற்றவர்களுக்கு கிடையாது” என்ற பிரிவினைவாத அரசியலை பிரித்தானியா ஒருபோதும் ஏற்காது என அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்தச் சட்டத்தின் மூலம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள் எனத் தொழிலாளர் கட்சி அரசு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றத்தை முடக்க கன்சர்வேட்டிவ் (Conservatives) மற்றும் Reform UK கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மக்களின் ஆதரவைத் திரட்ட நிதியமைச்சர் Rachel Reeves தீவிரமாகப் போராடி வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0