உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கோரெட்டி புயல் குறித்து கடுமையான எச்சரிக்கை!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இங்கிலாந்தை தாக்கும் கோரெட்டி புயல் (Storm Goretti) மற்றும் அதனால் ஏற்படக்கூடிய கடுமையான வானிலை மாற்றங்கள் குறித்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றினால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும், பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வேல்ஸ், மிட்லண்ட்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து போன்ற இடங்களில் மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறித்த மோசமான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழலில், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிர்காலத்தில் குழாய்கள் உறைவதைத் தடுக்கும் முறைகள் மற்றும் நிதி சேமிப்பு தொடர்பான ஆலோசனைகளையும் வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.இதேவேளை, இன்று மாலை முதல் பலத்த காற்றும், இரவு முதல் கடும் பனிப்பொழிவும் ஏற்படும் என்பதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகள் வெளி உலகத்தொடர்பின்றி துண்டிக்கப்படலாம் என்றும், பறக்கும் பொருட்களால் உயிர்ச் சேதம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0