உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

இலங்கையில் இருந்து லண்டனிலுள்ள சிங்கள பெண்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
40 பார்வைகள்

பிரித்தானியாவிலுள்ள இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு, இலங்கையிலுள்ள ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் லண்டனில் வசிக்கும் ஷானிகா மற்றும் நாதினி பிரித்தானிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கை ஒளிபரப்பாளர் மோக்ஷ பிரசாத் தங்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகவும், பணத்தை மீள கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கலைஞர் ரொமேஷ் சுகதபாலா நடத்தும் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தங்களிடமிருந்து 30,000 ரூபாய் மோசடி செய்ததாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0