அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை: பிராந்தியத்தில் நிலை தடுமாற்றத்தை ஏற்படுத்தலாமென எச்சரிக்கை.!
வெனிசுலாவில் உள்ள நிலைமை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் கவலை தெரிவித்துள்ளார்.அத்துடன், அந்த நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய உரையாடலுக்கு ஆதரவளிக்க ஐ.நா சபை தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி 3 அன்று அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை சர்வதேச சட்ட விதிகளை மீறியிருக்கலாம்.இது நாட்டிலும் பிராந்தியத்திலும் நிலைதடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், வெனிசுலாவின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிக்க, அமைதியான மற்றும் ஜனநாயகமான உரையாடல் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.