உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

ஏழு இலட்சம் ஆண்டு உறக்கம் முடிந்தது : ஈரானில் விழித்தெழும் பிரம்மாண்ட எரிமலை – விஞ்ஞானிகள் ஆச்சரியம்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ஈரானில் சுமார் 7 இலட்சம் ஆண்டுகளாக எவ்வித அசைவுமின்றி, ‘அழிந்துவிட்டது’ எனக் கருதப்பட்டு வந்த தப்தான் (Taftan) எரிமலை, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக செயற்கைக்கோள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்த எரிமலை 13,000 அடி உயரமுடையது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ‘சென்டினல்-1’ (Sentinel-1) செயற்கைக்கோள் எடுத்த படங்களை ஆய்வு செய்தபோது, கடந்த 2023 ஜூலை முதல் 2024 மே வரையிலான 10 மாதங்களில் எரிமலையின் உச்சிப்பகுதி 9 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த எரிமலையின் உட்பகுதியில் ஆழமான இடத்தில் அதிகப்படியான வெப்பம் கொண்ட திரவங்கள் (Magma) மற்றும் வாயுக்கள் குவிந்து வருவதாலேயே, எரிமலையின் தரைப்பகுதி மேல்நோக்கி உயர்ந்துள்ளது என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். இது அந்த எரிமலை மீண்டும் செயல்பாட்டுக்குத் தயாராவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

கடந்த 7 இலட்சம் ஆண்டுகளாக எந்தவித எரிமலைக் குழம்பு கசிவோ அல்லது அசைவோ இல்லாததால், இது இதுவரை ‘அழிந்த எரிமலை’ (Extinct Volcano) என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய மாற்றங்களை அடுத்து, இது ‘உறங்கும் எரிமலை’ (Dormant Volcano) என விஞ்ஞானிகளால் அதிகாரபூர்வமாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திடீர் மாற்றம் அப்பகுதி நிலப்பரப்பில் புவியியல் ரீதியாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விஞ்ஞானிகள் இந்த எரிமலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0