உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறையில் கம்பி எண்ணும் டக்ளஸைச் சந்தித்த நாமல்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
76 பார்வைகள்

துப்பாக்கி காணாமல்போன வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை சந்தித்துள்ளார்.

மஹர சிறைச்சாலைக்குச் சென்றே டக்ளஸைச் சந்தித்து நாமல் நலம் விசாரித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் எம்.பி., புலி டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் வசம் சென்ற விவகாரம் தொடர்பிலேயே டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

63 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

79 0 0