உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
108 பார்வைகள்

டித்வா புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அத்தோடு, குறித்த கொடுப்பனவை ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை புனரமைத்து முடிக்க தமது அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், வீடுகளை முற்றாக இழந்தவர்கள் ஒரு வருடம் முடிவதற்குள் தமக்கான வீட்டை அமைத்துக்கொள்ள உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம்.

எவ்வாறாயினும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் விவசாயிகளும் தமக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈடு இதுவரை உரிய முறையில் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த அனர்த்தத்தின்போது மகமன்கடவல குளம் பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய தமது வீடுகளுக்கு, இதுவரை 25,000 ரூபா அடிப்படை நஷ்டஈடு கூட கிடைக்கவில்லை என மஹமன்கடவல கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

63 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

79 0 0