உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கு:வெளிவந்துள்ள புதிய தகவல்கள்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
47 பார்வைகள்

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் இன்று வரை சர்ச்சைகள் மற்றும் மர்மங்கள் தொடர்ந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளை ஆரம்பிக்கும் போதே குழுவுக்கு சில காரணங்கள் தென்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த அரசாங்கங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது விசாரணைக் குழுவுக்கு ஏதோ ஒரு வகையில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அழுத்தங்கள் யாரால் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவரவில்லை.அத்தோடு சில முக்கியமாக தேவையான சீசீரிவி காணொளிகள் விசாரணைகள் குழுவால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.மேலும் அன்று இந்த விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் விட்ட தவறுகள் தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்னை எடுக்கப்படவுள்ளது. இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள குழுவுக்கு பல வழிகளில் தகவல்கள் தெரியவந்துள்ளன.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3.30 மணியளவில் ர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0