உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
86 பார்வைகள்

நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தப்படும் நவீன டிஜிட்டல் தீர்வுகளின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கான புதிய வேலைத்திட்டம் நேற்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ், போக்குவரத்துச் சேவையை மேலும் வலுப்படுத்துவதும், பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையிலான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.

அதன்படி பயணிகளின் வசதிக்காக வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் திட்டம், நேற்று மாகும்புர பல்நிலை போக்குவரத்து மையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வங்கி அட்டைகள் மூலம் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்தும் போது பயணிகளிடமிருந்து மேலதிகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. இதன் மூலம் பயணிகள் சரியான கட்டணத்தை மாத்திரம் செலுத்தும் வசதி கிடைக்கிறது.

இந்தத் திட்டம் முதற்கட்டமாக இன்று முதல் மாகும்புர – காலி மற்றும் மாகும்புர – எம்பிலிபிட்டிய ஆகிய வழித்தடங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வில் டிஜிட்டல் அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, மக்கள் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

41 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0