• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது.!

Mathavi by Mathavi
December 23, 2025
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0
கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது.!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்டா நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் 22.12.2025 நேற்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள் பருவகால மீன்பிடியில் ஈடுபடுவதற்காகவே ஆரம்பத்தில் கொக்கிளாயை நோக்கி வருகை தந்தனர். அங்கு தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் பருவகாலம் முடிவுற்றதும் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்வார்கள்.

அந்தவகையில் கொக்கிளாயில் குடியேறி தங்கியுள்ள சிங்களவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானியும் என்னிடம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்திலிருந்த தமிழ் மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிற்பாடு, எமது தமிழ் மக்களின் பூர்வீக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மீனவர்கள் குடியேறினர்.

எமது தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீக தனியார் காணிகள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடமுள்ளது.

இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன.

ஒருவருக்கு ஒரு இடத்தில் காணியிருக்கலாம் என்பதே அரச கொள்கையாகும். இவ்வாறு சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளில் இந்த பொரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி இருக்கத்தக்கதாக இங்கும், காணிகளை வழங்க முடியுமா? என்பதற்கு உரியவர்கள் பதிலளிக்க வேண்டும். இந்த விடயத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறாக எமது தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன்.

அத்தோடு புலிபாஞ்சகல்லில் சுற்றுலாத்தளத்திற்கென ஒதுக்கப்பட்ட காணிகளையும் ஆக்கிரமித்து அங்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் எடுக்கின்ற முயற்சியினையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கடந்த காலத்தில் தமிழர்களின் பூர்வீக மணலாற்று பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமிப்புச் செய்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்திருந்தனர்.

இந்நிலையில் முன்னைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் அடாவடியாகச் செயற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஊழலை ஒழிப்போமெனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசின் ஆட்சியில் ஊழல்கள் இடம்பெறக்கூடாது.

கொக்குத்தொடுவாயில் இவ்வாறு எமது தமிழ் மக்களுக்குரிய பூர்வீக காணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிராட்டிகுளம், பண்டாரவன்னி, மன்னாகண்டல் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கி, மாற்று வாழ்விடங்களை அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Related Posts

கதிர்காம யாத்திரீகர்களுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் அன்னதானம்

by selvan
July 8, 2026
0

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் நிதி அணுசரணையில்  அன்னதான நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. வரலாற்று...

நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியாவில் கிடைத்த நைட் பட்டம்

நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியாவில் கிடைத்த நைட் பட்டம்

by selvan
July 8, 2026
0

இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு...

தாதியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

தாதியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

by selvan
July 8, 2026
0

தாதியர்களின் வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் பணம் அறவிடும் மோசடி கும்பல் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது...

வௌிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களில் 17 இலட்சம் இலங்கையர்கள்!

வௌிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களில் 17 இலட்சம் இலங்கையர்கள்!

by selvan
July 8, 2026
0

தற்போது 17 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்....

மாதகல்லில் காணி ஒன்றிற்குள் கைக்குண்டு!

by selvan
July 8, 2026
0

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டது.அந்த கைக்குண்டானது நீதிமன்றத்தின்...

ரணிலுக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் 30 வரை ஒத்திவைப்பு!

ரணிலுக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் 30 வரை ஒத்திவைப்பு!

by selvan
July 8, 2026
0

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர்...

இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழப்பு!

by selvan
July 8, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நீர்கொழும்பு மோதலைத் தொடர்ந்து...

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் – பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

சிறைக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றுமொரு அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

by selvan
July 8, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கோரமான வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த...

காணி விடுவிப்புக்காக போராடும் கேப்பாப்புலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்.!

காணி விடுவிப்புக்காக போராடும் கேப்பாப்புலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்.!

by Mathavi
July 8, 2026
0

தமது பூர்வீக காணி விடுவிப்புக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமென வன்னி மாவட்ட...

சிறைச்சாலை வன்முறையில் துப்பாக்கிப் பிரயோகம்; நீதி அமைச்சரிடம் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை.!

சிறைச்சாலை வன்முறையில் துப்பாக்கிப் பிரயோகம்; நீதி அமைச்சரிடம் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை.!

by Mathavi
July 8, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எவ்வித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று சக...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி