• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையீடு.!

Mathavi by Mathavi
December 20, 2025
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையீடு.!
Share on FacebookShare on Twitter

உலக வங்கியின் நிதி உதவியில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக மக்களால் தம்மிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விவசாய நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான விபரங்களை வழங்குமாறு விவசாயத் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

உலக வங்கியின் நிதி உதவியில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அறிகின்றோம்.

இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மாதுளைச் செய்கையும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழைச் செய்கையும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பப்பாசி மற்றும் நிலக்கடலைச் செய்கையும், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் பேஷன்ஃப்ரூட் செய்கையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.

அந்தவகையில் வெளிநாட்டு ஏற்றுமதி நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அறியமுடிவதுடன், இத்திட்டத்திற்கு ஒரு பயனாளிக்கு ஒரு மில்லியன் வரையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.

அத்தோடு ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பாரிய நிதிச் செலவில் இத்திட்டத்திற்கு கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாரிய நிதிச் செலவில் இத்திட்டத்திற்கென உபகரணங்களும் பெறப்பட்டுள்ளன.

அத்தகைய சூழலில் இவ்வாறு உலக வங்கியின் நிதி உதவியில் செயற்படுத்தப்பட்ட இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக பலரும் என்னிடம் முறையீடு செய்துள்ளனர்.

குறிப்பாக இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்பட்ட கரைதுறைப்பற்றின் கொக்குத்தொடுவாய் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் பழம்பாசிப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.

இந்நிலையில் கொக்குத்தொடுவாயில் இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் மாதுளைச் செய்கையிலும் பாரிய குழறுபடிகள் இருப்பதாகவே என்னிடம் பலரும் முறையிட்டனர். மக்களுக்கு உரிய வகையில் உள்ளீடுகள் வழங்கப்படவில்லை எனவும், இத்திட்டத்தின் பிரகாரம் அப்பகுதியில் இரு கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டிய நிலையில் ஒரு கட்டடம் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதுடன், இரு கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக உரிய தரப்பினரின் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். குறித்த மாதுளைச் செய்கைத்திட்டம் செயற்பாடற்று தோல்வியடைந்த நிலையில் காணப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அதேவேளை பழம்பாசிப் பகுதியில் இத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பப்பாசி செய்கையிலும் முறைகேடுகள் இருப்பதாகவே அறியமுடிகின்றது. குறிப்பாக செய்கைக்காக வழங்கப்படுகின்ற விதைப் பைக்கட்டுக்களில் விதை தொடர்பான தெளிவான விபரங்கள் வழங்கப்படவில்லை. அத்தோடு பப்பாசித் திட்டத்திற்கென பாரிய நிதிச்செலவில்  அமைக்கப்பட்ட கட்டடங்கள் பயன்பாடற்று சீரற்ற நிலையில் காணப்படுவதுடன், பாரிய நிதிச் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் களஞ்சிய அறைகளில் மூடிவைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மாந்தைகிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பேஷன்ஃப்ரூட் செய்கைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அந்தத் திட்டம் தொடர்பிலான விபரங்களையும் அறிய விரும்புகின்றேன்.

மேலும் இந்த திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்ட ரீதியான விபரங்களையும் அறிய விரும்புகின்றேன்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் எத்தனை பயனாளிகள் உள்வாங்கப்பட்டனர்? இத்திட்டத்திற்கு மொத்தம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது?  இத்திட்டத்தினால் பயனாளிகள் நன்மை அடைந்தார்களா? இத்திட்டத்தின் மூலம் செய்கைபண்ணப்பட்ட உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றதா? எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என்கின்ற விபரங்களை அறிய விரும்புகின்றேன்.

ஏனெனில் இந்த திட்டத்திற்கென உலக வங்கியினால் பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு ஒன்று வழங்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தில் பாரிய ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவே என்னிடம் பலரும் முறையிட்டுள்ளனர்.

இத்திட்டம்  முன்னெடுக்கப்படுகின்ற சில இடங்களை நேரில் சென்று பார்த்தவரையில் எம்மாலும் அவ்வாறே அவதானிக்க முடிகின்றது.

அவ்வாறு இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பின், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் இது தொடர்பான முறையான விசாரணைகளை மேற்கொண்டு, ஊழலில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

எனவே இத்திட்டம் தொடர்பான சகல விபரங்களையும் தரவுகளையும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். விவசாயத் திணைக்களத்திடம் இத்திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களையும், தரவுகளையும் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இந்நிலையில் உதவி மாகாண விவசாயப் பணிப்பாளர் பதிலளிக்கையில்,
விவசாயத் திணைக்களம் இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை மாத்திரமே வழங்கியது. இதுதவிர இந்தத் திட்டத்திற்கும் விவசாயத் திணைக்களத்திற்கும் வேறெந்தத் தொடர்புகளும் கிடையாது.

எனினும் இத்திட்டத்திற்கு எத்தனை பேர் உள்வாங்கப்பட்டனர் என்பது தொடர்பான விபரங்களையும், தற்போது எத்தனை பேர் இந்த செய்கைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பான விபரங்களையும் எம்மால் தரமுடியுமெனத் தெரிவித்தார்.

Related Posts

கதிர்காம யாத்திரீகர்களுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் அன்னதானம்

by selvan
July 8, 2026
0

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் நிதி அணுசரணையில்  அன்னதான நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. வரலாற்று...

நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியாவில் கிடைத்த நைட் பட்டம்

நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியாவில் கிடைத்த நைட் பட்டம்

by selvan
July 8, 2026
0

இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு...

தாதியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

தாதியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

by selvan
July 8, 2026
0

தாதியர்களின் வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் பணம் அறவிடும் மோசடி கும்பல் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது...

வௌிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களில் 17 இலட்சம் இலங்கையர்கள்!

வௌிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களில் 17 இலட்சம் இலங்கையர்கள்!

by selvan
July 8, 2026
0

தற்போது 17 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்....

மாதகல்லில் காணி ஒன்றிற்குள் கைக்குண்டு!

by selvan
July 8, 2026
0

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டது.அந்த கைக்குண்டானது நீதிமன்றத்தின்...

ரணிலுக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் 30 வரை ஒத்திவைப்பு!

ரணிலுக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் 30 வரை ஒத்திவைப்பு!

by selvan
July 8, 2026
0

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர்...

இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழப்பு!

by selvan
July 8, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நீர்கொழும்பு மோதலைத் தொடர்ந்து...

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் – பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

சிறைக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றுமொரு அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

by selvan
July 8, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கோரமான வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த...

காணி விடுவிப்புக்காக போராடும் கேப்பாப்புலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்.!

காணி விடுவிப்புக்காக போராடும் கேப்பாப்புலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்.!

by Mathavi
July 8, 2026
0

தமது பூர்வீக காணி விடுவிப்புக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமென வன்னி மாவட்ட...

சிறைச்சாலை வன்முறையில் துப்பாக்கிப் பிரயோகம்; நீதி அமைச்சரிடம் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை.!

சிறைச்சாலை வன்முறையில் துப்பாக்கிப் பிரயோகம்; நீதி அமைச்சரிடம் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை.!

by Mathavi
July 8, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எவ்வித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று சக...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி