வடக்கு மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(16) வடக்கு மாகாண மகளிருக்கான வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு குறித்த அமைச்சின் செயலாளர் திரு.நந்தகோபன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் பி.ப 2.30 மணியளவில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமாகிய கௌரவ உபாலி சமரசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் வறுமையில் உள்ள 51 பெண் தொழில் முனைவோருக்கான தொழில் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.றதீஸ்வரன், கூட்டுறவு உதவி ஆணையாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சி.சிதம்பரநாதன் ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.



















