வவுனியாவில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக 1,118 குடும்பங்களை சேர்ந்த 3,598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 599 குடும்பங்களை சேர்ந்த 1,997 பேர் 21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 191 குடும்பங்களை சேர்ந்த 605 பேர் 8 முகாம்களிலும், வவுனியா வடக்கில் 172 குடும்பங்களை சேர்ந்த 519 பேர் 10 முகாம்களிலும், வவுனியா தெற்கில் 156 குடும்பங்களை சேர்ந்த 477 பேர் 8 முகாம்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சமைத்த உணவுகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் ஏனைய தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை வெள்ளம் வடியாத தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்கள் தங்களது உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதேவேளை அதிக நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் உள்ள 83 குளங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதேவேளை நேற்று மாலையின் பின்னர் வவுனியாவில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் தடைப்பட்டிருந்த பிரதான வீதிகள் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.










