வவுனியா வடக்கு பிரதேச சபையினால் கனகராயன்குளம் மற்றும் மன்னகுளம் வட்டாரத்தில் நேற்று (04.09.2025) “மக்களுடன் மக்களுக்காக நாம்” என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவையொன்று கனகராயன்குளம் பிரதேச சபை உப அலுவலகத்தில்
இடம்பெற்றது.
மேற்படி நடமாடும் சேவையானது வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் போது உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆயுள்வேத வைத்தியர், பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பங்குபற்றினர்.
இதன்போது ஆயுள்வேத மருத்துவசேவை, வியாபார அனுமதி மற்றும் வியாபார வரி தொடர்பான சேவை, கட்டட அனுமதி தொடர்பான சேவைகள், எல்லைக்கோட்டு சான்றிதழ் தொடர்பான ஆலோசனை மற்றும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல், கழிவகற்றல் சேவை, விளம்பரப் பலகை கட்டணம் செலுத்துதல், காணி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டது.
அத்துடன் நூலக அங்கத்துவம் தொடர்பான சேவைகள், வீதி விளக்கு கோரிக்கைகள் பெற்றுக்கொள்ளல், பொது மக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளல், கௌரவ தலைவர் மற்றும் கௌரவ உறுப்பினர்களுடனான சந்திப்பு ஆகியவற்றுடன் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளல், பொலிஸ் உத்தியோகத்தருடனான சந்திப்பு, கமநலசேவைகள் தொடர்பான சந்திப்பு ஆகிய சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது வட்டாரத்திற்குட்பட்ட மக்கள் பலரும் பங்குபற்றி பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.














