கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் தொழிற்பயிற்சி நிலைய உத்தியோகத்தர்களுக்கும், தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகேவுக்கும் இடையிலான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி அஜிதா பிரதீபன். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய அதிபர், மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி, கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.













