யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபவம் மிகப் பிரமாண்டமாக நேற்றைய (4)தினம் மாலை 5 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
கொடியேற்றமானது ஆலய பங்குத் தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகி பின்னர் திருச்செபமாலையுடன் மாலை 6 மணியளவில் திருப்பலி அருட்தந்தை சுவின் றெவல் அமலமரித்தியாகிகள் அடிகளாரின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இக் கொடியேற்ற நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை, பங்கு மக்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT




