கிளிநொச்சி – பனங்கண்டி பகுதியில் குடு போதைப்பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பனங்கண்டி பகுதியில் அமைந்துள்ள சந்தேக நபர்களின் வீட்டினை பொலிஸார் சோதனை செய்த போது கைவிடப்பட்ட டயர் ஒன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிராம் 75 மில்லி கிராம் குடு எனும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாயும், மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நாளை (04) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.