• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!

Mathavi by Mathavi
May 30, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!
Share on FacebookShare on Twitter

“சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதால் சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

‘சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், வடக்கு மாகாண இளையோர் மற்றும் சிறுவர் பங்கேற்புக்கான விசேட மதிப்பளித்தல் நிகழ்வு, யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் ‘சொண்ட்’ நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முற்பகல் சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,
“சமூகத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும் பிரதான ஊடகமாகச் சமூக வலைத்தளங்கள் மாறியுள்ள இன்றைய காலகட்டத்தில், இவ்வாறானதொரு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்கது. சில தினங்களுக்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஆளுநர் தடை விதித்துள்ளார் என்று தென்பகுதியிலுள்ள சமூக ஊடகங்களில் ஒரு செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. சமூகங்களுக்கிடையே குரோதத்தை உருவாக்கும் தீய நோக்கோடு இத்தகைய பொய்ச் செய்திகள் வேகமாகப் பகிரப்பட்டன. இது தொடர்பில் நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளேன். நாங்கள் சொல்லாத, செய்யாத விடயங்களைக்கூட ஏதோவொரு தேவைக்காக இவ்வாறு சமூகத்தில் பரப்புகின்றார்கள்.

நீங்கள் சமூகவிரோதச் செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தால், சமூக ஊடகங்கள் ஊடாக உங்கள் மீது சேறுபூசப்படும். உங்களைப் பற்றிப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு, உங்கள் நன்மதிப்பைக் கெடுப்பதற்கு முற்படுவார்கள். மாறாக, சமூகவிரோதச் செயல்களுக்குத் துணை நின்றால் உங்களைத் தூக்கிக் கொண்டாடுவார்கள். துரதிஷ்டவசமாக, தற்போது சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களே பலமானவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் பலரை வைத்துச் சமூக ஊடகங்களைத் தமக்குச் சாதகமாக இயக்கியும் வருகின்றனர்.

எனவே, சமூக ஊடகங்களில் வெளிவருகின்ற விடயங்கள் தொடர்பில் இளம் சமுதாயத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் அதீத அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஒரு தகவல் பகிரப்படும்போது அதன் உண்மைத்தன்மையையோ அல்லது அது எத்தகைய நோக்கத்துக்காகப் பகிரப்படுகின்றது என்பதையோ கட்டாயம் ஆராய வேண்டும். நாம் பின்தொடரும் அல்லது விருப்பம் தெரிவிக்கும் ஒரு சமூக ஊடகப் பதிவு உண்மையானதா என்பதைப் பலமுறை சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.” – என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் செயற்றிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி வழங்குநர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டி ஆளுநரால் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசா, யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. சர்மிலி சதீஸ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கல்லூரி மூத்த விரிவுரையாளர் கலாநிதி கே.சண்முகநாதன், வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மு.கஜவிந்தன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Related Posts

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

by selvan
June 13, 2026
0

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.இன்றைய நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து...

இ.போ.ச. சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடை நீக்கம்!

இ.போ.ச. சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடை நீக்கம்!

by selvan
June 13, 2026
0

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி ஒருவருக்கு இரண்டு நாள்கள் பணி இடைநிறுத்தம் செய்து வடக்கு...

சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்த நபருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும்...

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் பகுதியில், சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பகுதியில் நேற்று...

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் - நெடுந்தீவிலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர் ஒருவர் கடல் கொந்தளிப்புக் காரணமாகக் காணாமற்போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

by selvan
June 13, 2026
0

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிதுள்ளர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்...

குழந்தையை கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து விபத்தில் உயிரிழப்பு!

by selvan
June 13, 2026
0

குருநாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 40 வயதுடைய தந்தை ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் அவுலேகம பகுதியைச்...

பருத்தித்துறையில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வல்லிபுரக்குறிச்சி பகுதியைச்...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கலாமன்றங்களின் கலைஞர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வு, இன்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக...

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

by selvan
June 13, 2026
0

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரன் அவர்களுக்கு சொந்தமான வாகனம் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் கடற்படையினரிடம் சிக்கியுள்ளது. அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகளும் வாகனமும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி