• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாகும்.!

Mathavi by Mathavi
May 30, 2026
in இலங்கை செய்திகள்.
0
புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாகும்.!
Share on FacebookShare on Twitter

“நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும். எனினும், அதற்கான காலவரைவு குறித்து இதுவரை அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு அரசமைப்பு சார்ந்த உரிமைகளை எமது அரசு கண்டிப்பாகப் பெற்றுக்கொடுக்கும்.”

இவ்வரசு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் 30 வருடகால யுத்தம் முடிவடைந்தாலும், அதனால் ஏற்பட்ட வடுக்களுக்கும் பாதிப்புகளுக்கும் இன்றளவிலும் முறையான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இன்றும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்த இந்த ஒன்றரை வருட காலப்பகுதியில், வடக்கு மற்றும் கிழக்கில் பல ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கான வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை அவரிடமே முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் எமது அரசு உறுதியாகவுள்ளது. ஒருவேளை, தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சில காணிகளை விடுவிக்க முடியாமல்போகும் பட்சத்தில், அக்காணிகளுக்குச் சொந்தமானவர்களுக்குப் பொருத்தமான மாற்று நிலங்களோ அல்லது உரிய இழப்பீடோ வழங்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் ஊடாகத் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து எமது அரசு தீவிர கரிசனை கொண்டுள்ளது. வெறும் சம்பள அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை முழுமையாக மேம்படுத்திவிட முடியாது. எனவே, அவர்களுக்கு முறையான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக விசேட பொறிமுறைத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசமைப்பு மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயம் கிடையாது. எனவேதான், நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்று தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் என்பது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு விரிவான செயற்பாடாகும். எனவே, இந்தப் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்குரிய காலவரைவு பற்றி அமைச்சரவையில் இதுவரை எவ்வித பேச்சுகளும் இடம்பெறவில்லை என்பதுடன், அது குறித்து இனிவரும் காலங்களில் முறையான தீர்மானங்கள் எட்டப்படும்.” – என்று அமைச்சர் ஹர்ஷன மேலும் தெரிவித்தார்.

Related Posts

சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!

சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!

by Mathavi
May 30, 2026
0

"சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும்...

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் சிக்கினார்.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபல வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டபோது பெருமளவிலான சட்டவிரோத...

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 30, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது...

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!

by Mathavi
May 30, 2026
0

உலகப் புகழ்பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியர் சுவாமி பரமஹம்ச யோகானந்தர் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப்...

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன நான்கு மீனவர்களையும் தேடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,...

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

by selvan
May 29, 2026
0

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின்  தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

by selvan
May 29, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (29)...

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

நுவரெலியாவின் இராகலை மஹகுடுகலை, அப்பிள் பாம் பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர், ஹைபொரஸ்ட் இல.01-ஐச் சேர்ந்த மகாலிங்கம் சித்திராதேவி எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

by selvan
May 29, 2026
0

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது...

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி