யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான சொகுசு பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிஸாார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!
"சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும்...
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபல வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டபோது பெருமளவிலான சட்டவிரோத...
புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாகும்.!
"நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும். எனினும், அதற்கான காலவரைவு குறித்து இதுவரை அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு, கிழக்கு...
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!
உலகப் புகழ்பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியர் சுவாமி பரமஹம்ச யோகானந்தர் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப்...
வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன நான்கு மீனவர்களையும் தேடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,...
பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (29)...
நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!
நுவரெலியாவின் இராகலை மஹகுடுகலை, அப்பிள் பாம் பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர், ஹைபொரஸ்ட் இல.01-ஐச் சேர்ந்த மகாலிங்கம் சித்திராதேவி எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்...
சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!
தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது...
மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!
மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...










