கடந்த மூன்று தினங்களாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 18 வயதுக்கும் 20 வயதுக்கு உட்பட்ட ஜவர் தலா 20 மில்லி கிராம் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் பின்னர் சந்தேகநபர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இந்த நடவடிக்கை பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதியில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விநியோகம் செய்ய ஏற்பாடு நடக்கிறது என்றும் அதில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றி கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.