மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து, சித்திரத்தேரில் வீற்றிருந்து வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த 01.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று தேர்த் திருவிழா இடம்பெற்றதுடன் நாளை தீர்த்தோற்சவம் இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.
இன்றைய தேர்த் திருவிழா உற்சவத்திற்கு பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் விநாயகப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.




