நுவரெலியா கந்தபளை நு/கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தின் பிரதான பாதையருகில் மரம் ஒன்று நேற்று மாலை (30.05.2025) வேளையில் முறிந்து விழுந்ததோடு பொதுமக்களால் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
மேலும் பலத்த காற்று காரணமாக இரண்டு வகுப்பறை கூரைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. அதேநேரம் குறித்த பாடசாலையின் ஆரம்பப் பிரிவு கட்டிடம் பகுதியளவில் சேதமாகியுள்ளதால் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படையும் என்ற அச்சம் காணப்படுவதாக கல்லூரி அதிபர் தெரிவித்தார்.
மேலும் மாணவர்களுக்கான பாதுகாப்புச் செயற்பாடுகள் அதிபர், ஆசிரியர்கள், பா.அ.ச செயலாளர் மற்றும் பா.அ.ச உறுப்பினர்களால் சிறப்பாக முன்னெடுத்துள்ளனர்.
இந்த பாதிப்புகள் தொடர்பாக அதிபரால் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு இப்பிரதேசத்தைச் சேர்ந்த நலன் விரும்பிகள் சேதமடைந்துள்ள பாடசாலை வகுப்பறை கூரைகளை திருத்தியமைக்க உதவிக்கரம் பூண்டுள்ளனர்.




