மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

