முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் நேற்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பின்னர், மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலக கட்டிட நிலத்தை உடைத்து தோண்டி பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது நிலத்தடியில் இருந்து பல துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



