• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா ஆரம்பம்.!

Mathavi by Mathavi
May 11, 2025
in இலங்கை செய்திகள்.
0
ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா ஆரம்பம்.!
Share on FacebookShare on Twitter

2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று சனிக்கிழமை நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் ஆரம்பிக்கப்பட்டது.

“பஜெத மித்தே கல்யாண – பஜெத புரிசுத்தமெ” (நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்) எனும் தொனிப்பெருளின் நடைபெறும் இம்முறை அரச வெசாக் விழா, மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறும்.

மகாநாயக்க தேரர்கள், அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் அறிவுறுத்தல்களின்படி, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

மேலும், மே 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தி, அரசின் கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப மக்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு பௌத்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது முடிக்கப்படாத விகாரைகளின் அபிவிருத்திப் பணிகளை முப்படைகளின் உதவியுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரச வெசாக் விழாவுடன் இணைந்து, மக்களிடையே ஆன்மீக வளர்ச்சியையும் பௌத்த மத விழிப்புணர்வையும் வளர்க்கும் வகையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மூலம் பல விசேட நிகழ்ச்சிகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

பன்முக மத மற்றும் பன்முக கலாசார சமூகத்தைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தில் இந்த ஆண்டு அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வது சிறப்பு நிகழ்வாக உள்ளதோடு, நாடு முழுவதும் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவதும், உலகெங்கிலும் உள்ள பௌத்த நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

2025 புத்த வருட அரச வெசாக் விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையும் இங்கு வெளியிடப்பட்டதுடன், அதன் முதல் நினைவு முத்திரை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

மேலும், 2025 ஆம் ஆண்டு அரச வெசாக் விழாவுக்கு இணையாக, கொத்மலை மலியதேவ ரஜமஹா விஹாரையை புனித பூமியாக அறிவிக்கும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்குதல் மற்றும் குருநாகல் ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தை புனித பூமியாக அறிவிக்கும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

Related Posts

2029 இல் நாமலே ஜனாதிபதி.!

2029 இல் நாமலே ஜனாதிபதி.!

by Mathavi
June 14, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டுள்ளார் என்றும், அவ்வாறு தன் இனத்தை நேசிக்கும் ஒருவராலேயே ஏனைய இனங்களையும் ஆதரிக்க முடியும்...

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

by Mathavi
June 14, 2026
0

புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல்...

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

by Mathavi
June 14, 2026
0

ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

by Mathavi
June 14, 2026
0

மாவத்தகம, பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது...

புதையல் தோண்டிய மூவர் கைது.!

தொலைத்தொடர்பு கோபுர கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 14, 2026
0

ராகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும்...

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக் கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு சமூகத்தின் முன்னால் உத்தமர்களைப் போல் வலம்...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 14, 2026
0

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்துருகிரிய - கொடகம வீதியின் பனாகொட பகுதியில் பாதையைக் கடக்க முயன்ற நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்....

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்.!

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்.!

by Mathavi
June 14, 2026
0

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மோதர நிபுண' என்பவரின் சகோதரர் மற்றும் 'புளூமெண்டல் சங்கா' ஆகிய இரு...

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 14, 2026
0

பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நேற்று (13) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர் சுமார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி