இம்முறை கச்சதீவு உற்சவத்தில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளில் இருந்து 8000 பக்தர்கள் வருகை தருவார்கள் என யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.