யோஷித ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான யோஷித ராஜபக்ச இன்று(27) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது 500 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் பெலியத்தையில் வைத்து நேற்று முன்தினம்(25) யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து யோஷித ராஜபக்ச கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 34 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி இரத்மலானை பகுதியில் காணியொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணம் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றங்களை அவர் இழைத்துள்ளமைக்கான சாட்சியங்கள் காணப்படுகின்றமையினால் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.