• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, November 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரையான போராட்டம் இடைநிறுத்தம்.!

Mathavi by Mathavi
January 27, 2025
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரையான போராட்டம் இடைநிறுத்தம்.!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி இன்றையதினம் (27.01.2025) காலை பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றம் வந்தபோது தனியார் ஒருவர் இந்த பாடசாலை காணியினை சுபீகரித்து பாடசாலை அடையாளங்களை அழித்து வீடு ஒன்றை அமைத்துள்ளார். அப்போதைய அரசியல் சூழல் காரணமாக போராடி குறித்த காணியை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பின்னர் உரிய முறைப்படி பிரதேச செயலக அதிகாரிகளை அணுகி அவர்கள் ஊடாகவும் குறித்த தனிநபரை வெளியேற்ற முடியாத நிலையில், இன்றையதினம் காலை பூதன்வயல் தண்ணிமுறிப்பு அ.த.க பாடசாலை அமைந்திருந்த காணிக்கு அருகாமையில் மீண்டும் பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊர்மக்கள், பாடசாலை சமூகத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சர்மி, கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் வில்வராசா, அப் பகுதி கிராம சேவையாளர், முள்ளியவளை பொலிஸார் ஆகியோர் குறித்த போராட்டகாரரிடம் கலந்துரையாடி இதற்கான தீர்வினை வெகு விரைவில் பெற்றுத்தருவதாகவும், தற்காலிக பாடசாலை நடைபெறும் இடத்திற்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாகவும் கூறியதையடுத்து போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் உதவி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டம் தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி கிளிநொச்சி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் பாடசாலை காணிக்கான சாதகமான பதில் கிடைக்காதுவிடின் பிள்ளைகளது கற்பித்தல் செயற்பாட்டினை இடைநிறுத்தி எமது பிள்ளைகளுடன் இவ்விடத்தில் தீர்வு கிடைக்கும் வரை மீண்டும் போராட்டம் தொடரும் என தெரிவித்து போராட்டம் தற்காலிகமாக நிறைவு பெற்றிருந்தது.

குறித்த பாடசாலை பூதன் வயல் பொது நோக்குமண்டபத்தில் , மரங்களுக்கு கீழ் 53 மாணவர்களுடன் வசதிகளற்ற நிலையில் இயங்கி வருகின்றது.

குறித்த போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை குரல், சட்டம் எம்மை கைவிட்டு விட்டதா? பக்கச்சார்பற்ற தீர்வை தாருங்கள், கல்வி என்பது சம உரிமை அவை எமக்கு மட்டும் கிடைக்காதது ஏன்?, திறமை உள்ள எமது கல்வியை தட்டிப்பறிக்காதீர்கள்! போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு தற்காலிக கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஹெரோயினுடன் சிக்கிய ஐவர்.!

ஹெரோயினுடன் சிக்கிய ஐவர்.!

by Mathavi
November 9, 2025
0

நேற்று சனிக்கிழமை (08) ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட காலி, ஹங்கம,...

சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி.!

சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி.!

by Mathavi
November 9, 2025
0

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி வருகின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம்...

வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து.!

வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து.!

by Mathavi
November 9, 2025
0

அம்பலாங்கொடை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
November 9, 2025
0

சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. களனி...

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தீபன்.!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தீபன்.!

by Mathavi
November 9, 2025
0

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், மாவீரர் நாள் 2025 நிகழ்வுகள்...

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

by Mathavi
November 9, 2025
0

ஹட்டன் - மஸ்கெலியா வீதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் வனராஜா பகுதியில் உள்ள ஹட்டன் - மஸ்கெலியா பிரதான...

இலங்கை இராணுவத்தினரால் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை இராணுவத்தினரால் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
November 9, 2025
0

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர்...

வடக்கு முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றத்தின் 35 ஆம் ஆண்டு நினைவாக இடம்பெற்ற கலந்துரையாடல்.!

வடக்கு முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றத்தின் 35 ஆம் ஆண்டு நினைவாக இடம்பெற்ற கலந்துரையாடல்.!

by Mathavi
November 9, 2025
0

1990 காலப்பகுதிகளில் வடக்கு முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவாக, தமிழ் - முஸ்லிம் நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்தலை வலியுறுத்தும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.!

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.!

by Mathavi
November 9, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின்...

கல்முனை தமிழர் பகுதிகளில் மீண்டும் காணி அபகரிப்பா?

கல்முனை தமிழர் பகுதிகளில் மீண்டும் காணி அபகரிப்பா?

by Mathavi
November 9, 2025
0

"கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி ஆக்கிரமிப்பு தொடர்கின்றதா? இன, மத பேதமற்ற அரசு எனக் கூறும் அநுர அரசு இத்தகைய சட்டவிரோத இனவாத காணி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி