27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் !

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், மற்றும் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தலுக்காக அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவதாக இலங்கை பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளிக்கிறது. வெகுவிரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது பொறுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்த தீர்ப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பலத்தை ஆணைக்குழு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. நீதிமன்றத்தின் தீரப்புக்கமைய சகல தரப்பினரும் செயற்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன்தினம் புதன்கிழமை கூடியது. இந்த கலந்துரையாடல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு உரிய இலக்கம் SCFR 69 2023 , SCFR 90 / 2023 மற்றும் SCFR 139 \ 2023 இலக்க அடிப்படை உரிமை மனுத் தொடர்பில் 2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்ற ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் வழங்கிய தீர்ப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு கௌரவமான முறையில் ஏற்றுக்கொண்டுள்ளது.

வாக்காளர்களின் சட்ட ரீதியிலான அபிலாசைகள், வாக்களிக்கும் உரிமை , அரச நிறுவனங்களின் செயற்பாடுகளினால் ஏற்படக் கூடிய நியாயமான கோட்பாடுகள் மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி வழங்கள், தொடர்பில் அரச நிறுவனங்களிடம் உள்ள இயைவான அதிகாரங்களை செயற்படுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்ததன் பின்னர் வழங்கப்பட்டுள்ள மீயுயர்வான நீதிமன்றத்தின் தீர்ப்பாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தீர்மானிக்கப்பட்டதற்கமைய நடத்தாமை மக்களின் அடிப்படை தொடர்ச்சியான மீறப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. ‘ சட்ட நியதிகளுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்பட்டு , 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் விரிவான காரணிகளை குறிப்பிட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு திட்டமிடல், ஒருங்கிணைத்தல், வளங்களை வேறுப்படுத்தல், அதற்காக ஏனைய தரப்பினரது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல், மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நிறைவேற்றுத்துறை உட்பட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தத்துவங்கள், பொறுப்பு மற்றும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் வெவ்வேறாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான உரிய சட்டம் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டம் என்றும், சட்டத்தில் விதித்துரைக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் விசேடமாக அவதானம் செலுத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்பினால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போனது என்று குறிப்பிடப்படுவது குறித்து ஆராய்ந்த உயர்நீதிமன்றம் ‘ செலவினங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுப்பது வாக்கெடுப்புக்கான பணிகளை முன்னெடுத்ததன் பின்னராகும். அந்த செயற்பாடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதுடன் தொடர்புடையதல்ல,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற நிதியமைச்சரின் அனுமதியை கோரி தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்காத காரணத்தால் தேர்தல் பணிகளை இடைநிறுத்த நேரிட்டது.இதனால் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட காலவரைக்குள் தேர்தலை நடத்த முடியாமல் போனது.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு சார்பாக அழுத்தமான நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு சகல அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு செயற்படுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை மற்றும் பொறுப்பு என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், மற்றும் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தலுக்காக அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவதாக இலங்கை பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளிக்கிறது.

இலங்கை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது பொறுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்த இந்த தீர்ப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பலத்தை ஆணைக்குழு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதேபோல் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு அமைய சட்டத்தால் விதித்துரைக்கப்பட்டுள்ளதற்கமைய வெகுவிரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தீர்மானித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பினை கருத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு தனது நோக்கத்தை செயற்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பு மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் ஊடாக ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள தத்துவங்கள் மற்றும் பொறுப்புக்கள் செயற்படுத்தப்படும். சகல தரப்பினரும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய செயற்பட வேண்டும்.

Related posts

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

User1

விவசாயத் திணைக்களம் அதிக பருவத்தில் அரசினால் நெல் கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச விலையை வழங்கியுள்ளது.

sumi

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்?

sumi

Leave a Comment