28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலைய மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சனைகள் தொடர்பான நூல் வெளியீட்டு விழா

மலைய மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சனைகள் ஒரு சட்ட அடிப்படையான விளக்கம் எனும் ஆய்வறிக்கை நூல் வெளியீட்டு விழா அட்டனில் நாளை 17.09.2024.காலை 10 மணிக்கு சிவாலயா மண்டபத்தில் ( ஹட்டன் இந்து மஹா சபைக்கும் மற்றும் மின்சார சபைக்கு அருகில்) பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி. கணேஷலிங்கம் தலைமையில் நடைபெற உள்ளது.

மேற்படி ஆய்வினை மலையக சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார் மேற்கொண்டுள்ளதுடன் அதனை பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனம் (சிப்ஸ்) வெளியிட்டு வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் மலையகத்தினை பிரதிநித்துவம் செய்யும் 11 மாவட்டங்களை சேர்ந்த மலையாக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்வதுடன் மலையக சட்டத்தரணிகள் மற்றும் கல்விமான்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

மலையக மாவட்டங்களில் சேர்ந்து பெரும்பாலான மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி. கணேஷலிங்கம் தெரிவித்தார். நிகழ்விற்கு ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகிறது

Related posts

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே – அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

User1

விபத்துக்குள்ளாகி வீட்டின் கூரையில் கவிழ்ந்த கார் :பெண்ணொருவர் படுகாயம்

User1

முதன்முறையாகப்ஜேவிபி தலைவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த இந்தியா.!

sumi

Leave a Comment